விழுப்புரத்தில் பத்திரிகையாளர்களை புறக்கணித்து நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் பத்திரிகையாளர் களை புறக்கணித்து நேற்று விவசாயிகள் குறைதீர்கூட்டம் நடை பெற்றது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்கூட்டம் நடைபெற்று வந்தது.முறையான அழைப்பு இல்லாவிட்டாலும் பத்திரிகையாளர் களுக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கும் என்பது தெரி யும். கரோனா ஊரடங்கிற்கு பின்இந்த முறை மாற்றப்பட்டு மாதத் தில் ஏதாவது ஒரு நாளின் மாலைவேளையில் இக்கூட்டம் நடை பெற்று வந்தது.

இதனை முன்னதாகவே செய் திக்குறிப்பு மூலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அறிவிக்கும். இதை செய்தியாக பத்திரிக்கைகள் வெளியிட்டு வந் தன. அதன் மூலம் விவசாயிகளும் கூட்டத்தில் பங்கேற்று வந் தனர்.

இந்நிலையில் நேற்று மாலை5.18 மணிக்கு செய்தி மக்கள் தொடர் புத்துறையின் வாட்ஸ் அப் குழுவில் ” தற்போது ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெறுகிறது” என தெரிவிக்கப்பட்டது. அதன் பின் மொபைல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. திடீரெனஅழைக்கப்பட்டதால் பெரும்பா லான பத்திரிக்கையாளர்கள் இக் கூட்டத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த வாரம் தளவானூர் தடுப் பணை சேதம் குறித்து விவசாயிகள் எழுப்பப்படும் கேள்விகளை பத் திரிக்கையாளர்கள் வெளியே தெரி யப்படுத்திவிடக்கூடாது என்பதால் திட்டமிட்டு பத்திரிக்கையாளர்களை புறக்கணிக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்