கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரி பாமக போராட்டம்

By செய்திப்பிரிவு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமகவினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கேட்டு பாமக மற்றும் வன்னியர் சங்கம் நடத்தி வரும் தொடர்போராட்டங்களின் அடுத்தக்கட்ட மாக அனைத்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்கள் முன் நேற்றுமக்கள்திரள் போராட்டம் நடைபெற் றது.

அந்தவகையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே மாநில துணைப்பொதுச் செயலாளர் தங்க.ஜோதி தலைமையில் போராட்டம் நடந்தது. அரசியல் ஆலோசனைக்குழுத்தலைவர் பேராசிரியர் தீரன், முன்னாள் எம்பி தன்ராஜ், மாநில துணைப்பொதுச் செயலாளர் சிவகுமார், மாநிலத் துணைத்தலைவர் கருணாநிதி, மாவட்ட செயலாளர்கள் புகழேந்தி, கனல் பெருமாள், பால.சக்தி, மாவட்ட பொருளாளர் மாலா சிவ குமார், வழக்கறிஞர்கள் பாலாஜி, கலியமூர்த்தி உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் இடஒதுக்கீடு கோரிக் கையை வலியுறுத்தி ஆட்சியர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி

கடலூர் மாவட்டத்தில் அக்கட்சி யின் மாநில துணைப்பொதுச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் பாமகவினர் திரளாக சென்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரியிடம் மனு அளித்தனர்.

இதேபோன்று கள்ளக்குறிச்சி யில் பாமக மாவட்டத் தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் அக்கட்சி யினர் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவிடம் மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்