கிருஷ்ணகிரியில் தைப்பூசத் திருவிழா அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன் வீதி உலா

By செய்திப்பிரிவு

காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சுவாமி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 84-வது ஆண்டு தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நாளான தைப்பூச திருநாளான நேற்று முன்தினம் இரவு மின் விளக்குகள் மற்றும் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், மேள தாளத்துடன் பக்தர்கள் சூழ முருகன் நகர் வலம் வந்தார்.

தேர் பவனி, சென்னை சாலை, கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா, காந்தி சிலை வழியாக பெருமாள் கோயிலை வந்தடைந்தது. அப்போது, சாலையின் இருபுறங்களில் திரண்டிருந்த பக்தர்கள் தேரின் மீது உப்பு, மிளகு, சில்லரைக் காசுகளை வீசி, நேர்த்திக்கடன் செலுத்தினர். மீண்டும் தேர் காட்டிநாயனப்பள்ளிமுருகன் கோயிலைச் சென்றடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்