கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினர் போராட்டம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் வன்னியர் களுக்கு 20 சதவீத தனி இடஒதுக் கீடு வழங்க வலியுறுத்தி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று போராட்டம் நடை பெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாமக மாநகர் மாவட்டச் செயலாளர் பி.கே.திலீப் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கே.வினோத், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் ம.பிரின்ஸ், கு.லட்சுமண குமார், மாநில துணைத் தலைவர்கள் க.உமாநாத், பெ.மனோகர், மாவட்டச் செயலாளர்கள் சி.சுந்தர் (மேற்கு), கி.சரவணன் (கிழக்கு) உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மாவட்ட தொழில் மையம் அருகில் இருந்து ஊர்வல மாகப் புறப்பட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு ஆட்சியர் அலுவலகம் வரை சென்றனர்.

அரியலூரில்...

அரியலூர் ஒற்றுமை திடலிலி ருந்து மாதாகோயில், சத்திரம், கடைவீதி வழியாக ஆட்சியரிடம் மனு அளிக்க பாமகவினர் பேரணி யாக சென்றனர். அவர்களை பேருந்து நிலையம் அருகே போலீஸார் வழிமறித்தனர். இதை யடுத்து, பாமக நிர்வாகிகள் 5 பேர் மட்டும் ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியர் த.ரத்னாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

பேரணிக்கு அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.திருமாவளவன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சின்னதுரை முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் சக்திவேல், சங்கர், நகரச் செய லாளர் விஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூரில்...

பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் பெரம்பலூரில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் வைத்தி தலைமையில் ரோவர் வளைவு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை பாலக்கரை பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, பாலக்கரை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், 10 பேர் மட்டும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

கரூரில்...

கரூர் மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் பாமக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.

முன்னதாக, காளியப்பனூர் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து, ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பாமக மாநில துணைச் செயலாளர் பிஎம்கே.பாஸ்கரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூரில்...

தஞ்சாவூர் மேல வஸ்தா சாவடியிலிருந்து பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர் வலமாகச் சென்றனர். பின்னர், ஆட்சியர் ம.கோவிந்தராவை நிர்வாகி கள் சந்தித்து மனு அளித்தனர். பாமக மாநிலத் துணைப் பொதுச்செயலர் கே.ஆர்.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாகை, மயிலாடுதுறையில்...

நாகை காடம்பாடியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பாமக, வன்னியர் சங்கத்தினர் ஊர்வலமாகச் சென்றனர். இதில், மாநில துணை பொதுச் செயலாளர் வேத.முகுந்தன் தலைமையில் மாவட்டச் செயலாளர் ராஜசிம்மன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர், முக்கிய நிர்வாகிகள் மட்டும் மாவட்ட ஆட்சி யர் பிரவீன் பி.நாயரை சந்தித்து மனு அளித்தனர். மயிலாடுதுறை புதுஇந்தளூரில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மாநில துணை பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் பாமக வினர் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்