டெல்லிக்குச் சென்று தினம் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்துவது என தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திருச்சியில் அந்தச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் கிருஷ்ணன், கிட்டப்பா, முருகேசன், செந்தில்குமாரசாமி, அன்பழகன், பழனிவேல், முருகன், தினேஷ், சக்திவேல், ஜாகீர், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், டெல்லி டிராக்டர் பேரணியின்போது நேரிட்ட சமூகவிரோதச் செயல்களுக்கு விவசாயிகள் மீது பழி சுமத்தக்கூடாது. விவசாய விளைப் பொருட்களுக்கு லாபகர மான விலை வழங்க வேண்டும். விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 60 வயது நிறைவடைந்த விவசாயிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மரபணு மாற்றம் செய்யப் பட்ட விதைகளை இறக்குமதி செய்ய தடைவிதிக்க வேண்டும்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரையும், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை அளிக்கும் வரையும் தமிழகத்திலிருந்து விவசாயிகள் 100 பேர் டெல்லிக்குச் சென்று, தினம் ஒருவர் வீதம் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago