கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலியில் சந்திப்பு ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமை வகித்தார். மாநில இணை பொதுச்செயலாளர் இசக்கி, மாநில துணை பொதுச்செயலாளர் இரா.அன்பழகன், நிர்வாகிகள் எம்.அந்தோணிராஜ், முத்துசரவணன், டி.ஜீசஸ் ஜான், ஹரிகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணைப் பொதுச்செயலாளர் ஜி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். துணை அமைப்புத் தலைவர் வள்ளிநாயகம், மாவட்டத் தலைவர்கள் சிவபெருமாள், பாண்டி, இ.மாடசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் பாமக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கில்மன்புருஷ் எட்வின் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில துணைச் செயலாளர் ஐசியாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தென்காசி
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் பாமக சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை பொதுச் செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் குமாரசாமி, அய்யம்பெருமாள், சேது அரிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சீதாராமன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் குலாம், இளைஞரணி மாநில செயலாளர் சாகுல் ஹமீது, துணைத் தலைவர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago