திமுக ஆட்சிக்கு வந்ததும் கட்சி பாகுபாடின்றி தகுதியுள்ள அனை வருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வரவேற்றார். தி.மலை, கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர் மற்றும் செங்கம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதி களைச் சேர்ந்த மக்களிடம் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றார். பின்னர் அவர், மனுக்களை அளித்த சிலரிடம் குறைகள் மற்றும் கோரிக் கைகளை கேட்டறிந்தார்.
பின்னர், மு.க.ஸ்டாலின் பேசும்போது, "செங்கம், கலசப் பாக்கம் பகுதியில் வாசனை திரவியம் தயாரிக்கவும் என இரண்டு தொழிற்சாலைகளை திறக்க வேண்டும் என கோரிக் கை வைத்துள்ளீர்கள். அடிக்கல் நாட்ட மட்டுமல்ல, திறப்பு விழாவுக்கும் நான் வருவேன். இந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. சேமிக்கும் நிலையில் மக்கள் இல்லை.
வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜெயலலிதாவால் பதவி பறிக்கப் பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு, முதல்வர் பழனிசாமி, மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்துள்ளார்.
இந்த ஆட்சியில் நடைபெறும் அக்கிரமங் களுக்கு முடிவு கட்ட வேண்டும். மூன்று மாதத்தில் பெரியளவில் மாற்றம் காணப் போகிறோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் கட்சி பாகுபாடின்றி தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கப்படும்.
திமுக ஆட்சியில் குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காவிரி நீரை பெற வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கருணாநிதி. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. தண்ணீர் இல்லாத காடு என்று கூறப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ரூ.616 கோடியில் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த ஆட்சியாளர்கள், எதை பற்றியும் கவலைப்படவில்லை. குடிநீர் பிரச்சினையை தீர்க்கவில்லை. பல ரயில்வே திட்டங்களை நிறை வேற்றவில்லை” என்றார்
இதில், திமுக முதன்மை செயலாளர் நேரு, பிச்சாண்டி எம்எல்ஏ, எம்பி அண்ணாதுரை, கீழ்பென்னாத்தூர் ஒன்றியக் குழு உறுப்பினர் அனுராதா சுகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தனுசு, அருள்குமரன், விஜயராஜ், செந்தில்குமார், கலைமணி, தி.மலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன், ஆரணி ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுந்தர் மற்றும் ஆரணி ஒன்றிய குழு பெருந்தலைவர் கனிமொழி சுந்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆரணி
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்‘ என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூரில் நேற்று மாலை நடைபெற்றது. ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் போளூர் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.பின்னர் அவர் பேசும்போது, “தி.மலை மாவட்டத்தில் உள்ள அமைச்சரை மக்களுக்கு தெரியாது. அதே நேரத்தில் அவருக்கு தெரிந்தது எல்லாம் கமிஷன், கலெக்ஷன் மற்றும் கரப்ஷன் தான். அதிமுக ஆட்சியில் சிலை கடத்தல் அதிகம் நடந்துள்ளது. அதனை விசாரிக்க நியமிக்கப் பட்ட காவல் துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் குழுவுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவரது விசாரணைக்கு தடையாக இருந்தவர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன். நீதிமன் றத்திலேயே தனக்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். ஆரணிக்கு அவப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்தவர் சேவூர் ராமச்சந்திரன்.
வந்தவாசியில் 3-வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவில்லை. அரசு மருத்துவ மனைகளில் போதிய வசதிகள் இல்லை. போதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகள் என்று இல்லாமல் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற போகிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago