கள்ளிப்பாறை கிராமத்தில் பெருங்கற்கால நினைவு சின்னங்கள் கண்டெடுப்பு தொல்லியல் துறை பாதுகாக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

ஜவ்வாதுமலையில் கள்ளிப்பாறை கிராமத்தில் உள்ள 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால நினைவு சின்னங்களை தொல்லியல் துறையினர் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.மலை மாவட் டத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் சதீஷ் கூறும்போது, “ஜவ்வாதுமலையில் உள்ள கள்ளிப்பாறை என்ற கிராமம் அருகேஉள்ள மலையில் 3 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய பெருங்கற்கால நினைவு சின்னங் கள் அதிகளவில் உள்ளன.

அக்காலத்தில் வாழ்ந்தவர்கள், மூதாதையர்கள் நினைவாக கற் திட்டுக்களை அமைத்துள்ளனர். இந்த கற்திட்டுக்கள் உயிரிழந்தவர் களின் புதை குழிகள் மேல் அமைக்கப்பட்டன. இதுபோன்ற கற்திட்டுகள், உலகம் முழுவதிலும் பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களால் பல கால கட்டங்களில் அமைக்கப்பட்டன. கள்ளிப்பாறை யில் உள்ள வரலாற்று பகுதியை தமிழக அரசும், தொல்லியல் துறையும் இணைந்து பாதுகாக்க வேண்டும். மேலும், அந்த பகுதியில் துறை சார்ந்த ஆய்வுகளை மேற் கொண்டால், பழங்கால தகவல்கள் கிடைக்கும். பெருங்கற்கால நினைவு சின்னங்களை பாதுகாக்க வேண்டுமென மலை வாழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்