குறிஞ்சிப்பாடி அருகே என்எல்சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி வெங்கடாம் பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சபாராஜேந்திரனிடம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். சட்டமன்ற உறுப்பினர் இது குறித்து என்எல்சி நிறுவன அதிகாரிகளிடம் சமூக பொறுப் புணர்வு திட்ட நிதியில் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதனை தொடர்ந்து என்எல்சிநிறுவனத்தின் சமூக பொறுப் புணர்வு திட்டநிதி மூலம் நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் ரூ. 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. என்எல்சி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மோகன் முன்னிலையில் சட்ட மன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து என்எல்சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.1.30 லட்சம் செலவில் தூர்வாரி செப்பனிட்ட கீழூர் சோழன் ஏரியை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து. கீழூர் பகுதியில் ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பொதுமேலாளர் ராமச்சந்திரன், முதன்மை மேலாளர் சண்முக சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago