மனோகரன் மீது உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போக்ஸோ சட்டத்தில் மனோகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜராஜேஸ்வரி வாதாடினார். விசாரணை முடிந்த நிலையில் மனோகரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வெங்கடேசன் உத்தரவிட்டார்.
அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் படிப்பு மற்றும் எதிர்காலத்துக்காக தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago