மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என தி.மலை மாவட்ட ஆட்சி யர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வெளிநாடுகளில் இருந்து அறி முகம் செய்யப்பட்ட தேளி மீன், அணை மீன் மற்றும் பெரிய கெளுத்தி மீன் எனப்படும் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்த மீன்கள், காற்று சுவாச மீன்களாகும். இடைவிடாமல் மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. 8 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழக்கூடியது. நீர் நிலைகளில் நுழைந்து விட்டால், அதனை அழிப்பது கடினம். குறைந்த அளவு உள்ள தண் ணீரில், அதிக இனப் பெருக்கம் செய்யக்கூடியது.

நமது நாட்டின் நன்னீர் மீன் இனைங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால், நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாய நிலை உருவாகும். பண்ணை குட்டை மற்றும் குளங்களில் இருப்பு செய்து வளர்த்தால் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காலங்களில் குளங்களில் இருந்து மற்ற நீர் நிலைகளுக்கு சென்றுவிடும். ஏரி மற்றும் ஆறுகளுக்கு சென்றுவிட்டால், குறிப்பிட்ட காலத்தில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர, வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பு இல்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி இருக்காது.

எனவே, தி.மலை மாவட் டத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க வேண்டாம். மேலும், மீன் பண்ணைகளில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து வந்தால், அதனை உடனடியாக அழிக்க வேண்டும். தடையை மீறி ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து, விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வகையான மீன்கள் வளர்ப் பது தெரியவந்தால், காவல்துறை உதவியுடன் அழிக்கப்படும். இதுபோன்ற மீன்களை பொது மக்களும் வாங்க முன் வர வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்