நவல்பூர் முதல் காரை கூட்டுச்சாலை வரை ரூ.34.16 கோடி மதிப்பில் மேம்பாலத்துக்கான பூமி பூஜை ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தி பங்கேற்பு

ராணிப்பேட்டையில் ரூ.34.16 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் முதல் காரை கூட்டுச் சாலை வரை உள்ள பழைய மேம் பாலம் பழுதடைந்து, அபாய நிலை யில் இருந்தது. இதனால், அவ்வழி யாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக் கப்பட்டனர். மேலும், மேம் பாலம் குறுகிய அளவில் இருந்த தால் வாகன ஓட்டிகள் போக்கு வரத்து நெரிசலில் சிக்கித்தவித்த னர். அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வந்தன.

எனவே, பழுதடைந்த மேம் பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் காந்தி, புதிய மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, நவல்பூர் பேருந்து நிறுத்தம் முதல் காரை கூட்டுச்சாலை ஆயுதப்படை அலுவலகம் வரை சுமார் 920 மீட்டர் நீளத்துக்கு புதிய மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.34.16 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து, நவல்பூர் முதல் காரை கூட்டுச்சாலை வரை புதிய மேம்பாலம் அமைப்பதற் கான பூமிபூஜை காரை கூட்டுச் சாலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

இப்பணிகள் இரண்டரை ஆண்டுகளில் முடிக்கப்படும் என்றும், புதிய மேம்பாலம் அமைய இருப்பதால் அப்பகுதியில் மாற்றுப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்