புலிப்பாக்கத்தில் முதுமக்கள் தாழிகளை ஆய்வு நடத்த கோரிக்கை

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் பகுதி பாலாற்றங்கரையில் வாழ்ந்த முன்னோரின் நாகரிகம் பற்றி அறிய உதவும்முதுமக்கள் தாழிகள் அதிகம்உள்ளன. இவற்றை தொல்லியல் துறை ஆய்வு செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புலிப்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதி மலைகளில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதுமக்கள் வாழ்ந்ததற்கான அரிய சான்றுகள் புதைந்துள்ளன.

இதேபோல் வெங்கடாபுரம், சாஸ்திரம்பாக்கம், வெண்பாக்கம், குருவின்மேடு, தாசரிகுன்னத்தூர் பகுதிகளிலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வசித்துள்ளனர்.

இதற்கான அரிய வகை சின்னங்களாக இறந்தவர்களை புதைக்கும் முதுமக்கள் தாழிகள் உள்ளன. இது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்