சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வருவாய்த் துறையினர் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில்ஈடுபட்டதால் வட்டாட்சியர் அலுவலகங்கள் வெறிச்சோடின.
வருவாய்த் துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கவேண்டும். அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், ஓட்டுநர் உள்ளிட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாதோரின் பதவி உயர்வை உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த் துறையினர் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 9 வட்டாட்சியர் அலுவலகங்கள், 2 கோட்டாட்சியர் அலுவலகங்கள் வெறிச்சோடின. இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்சங்க மாவட்டச் செயலாளர் தமிழரசன் கூறுகையில்: புயல்,வெள்ளம், தேர்தல், மக்கள்தொகை கணக்கெடுப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்புஎன பொது மக்களுக்கான அத்தியாவசியப் பணிகளைச் செய்யும் வருவாய்த் துறையினரில் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் பிப்.,6-ம் தேதி சேலத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் பேரணி நடக்கும். தொடர்ந்து பிப்.17-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம், என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago