முத்தாளம்மன், திரவுபதியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

By செய்திப்பிரிவு

கருக்கன்சாவடி கிராமத்தில் முத்தாளம்மன், திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் கருக்கன்சாவடி கிராமத்தில் முத்தாளம்மன், திரவுபதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயி லில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, தென்பெண்ணை ஆற்றில்இருந்து புனித தீர்த்தம் எடுத்துவரப்பட்டு வேதங்கள் முழங்க அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப் பட்டது. இந்நிகழ்ச்சியில் கருக்கன்சாவடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் தாளப் பள்ளம் அருகிலுள்ள குள்ளனூர் கிராமத்தில் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, 26-ம் தேதி காலை கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது.

அதைத் தொடர்ந்து 108 மூலிகை யாகம், தீபாராதனை, தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம், முதல் காலயாக பூஜை, அஷ்டபந்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குப் பின் நேற்று காலை கோயில் கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி பெருமாள், தேவி, பூதேவியருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கும்பாபி ஷேக முடிவில்கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்