கும்மனூரில் எருதுவிடும் விழாவில் சீறிப் பாய்ந்த காளைகள்

By செய்திப்பிரிவு

கும்மனூரில் நடந்த எருதுவிடும் விழாவில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் சீறி பாய்ந்து ஓடின.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூர் கிராமத்தில் 5-ம் ஆண்டு எருதுவிடும் திருவிழா நடந்தது. இவ்விழாவை திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளை களை வாகனங்களில், அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். முன்னதாக காளைகளுக்கு பூஜை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு காளையாக, குறிப்பிட்ட தூரம் ஓட விட்டு, அது எவ்வளவு நேரத்தில் ஓடுகிறது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அதில் எந்த காளை அந்த தூரத்தை மிக குறைந்த நேரத்தில் கடக்கிறதோ அந்த காளையின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதன்படி மொத்தம் 54 காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்