இறைவன்காடு, ஆற்காட்டான் குடிசையில் எருது விடும் விழாவில்30-க்கும் மேற்பட்டோர் காயம்

By செய்திப்பிரிவு

வேலூர் அடுத்த இறைவன்காடு மற்றும் ஆற்காட்டான் குடிசையில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா தொடர்ச்சியாக நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய எருது விடும் விழா பிப்ரவரி 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள இறைவன்காடு பகுதியில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய போட்டி பிற்பகல் 2 மணிக்கு முடிவடைந்தது. விழாவையொட்டி, இளைஞர்கள் எருதுகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் போட்டியில் கலந்துகொள்ள வந்த இளைஞர்கள் போட்டிக்கான விதிமுறைகளை உறுதி மொழியாக எடுத்தனர். இதையடுத்து, ஒன்றன்பின் ஒன்றாக எருதுகளை அவிழ்த்து விட்டனர். அப்போது, எருது கள் சீறிப்பாய்ந்து ஓடின. இதனை, இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் கைகளால் தட்டி உற்சாகப்படுத்தினர்.

அப்போது பலர் தவறி கீழே விழுந்ததால் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவ்விழாவில் 250-க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன. அணைக்கட்டு, ஊசூர், அரியூர், சித்தேரி, வேலூர், ஆரணி, செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டுகளித்தனர். எருது விடும் விழாவில் பங்கேற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு 51 பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல, அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் நேற்று காளை விடும் விழா நடந்தது. 150 காளைகள் போட்டியில் கலந்து கொண்டு குறிப்பிட்ட இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்து ஓடின. குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நிமிடங்களில் கடந்து சென்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காளை விடும் விழாவை வேடிக்கை பார்க்க வந்த 30-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர்.

அவர்கள், உடனடியாக மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். காளை விடும் விழாவை யொட்டி இறைவன்காடு மற்றும் ஆற்காட்டான் குடிசை ஆகிய 2 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்