வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண்களுக்கான சேவை மையம் திறப்பு

By செய்திப்பிரிவு

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பெண் களுக்கான சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலை யில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண்களுக் கான பிரச்சினைகளை தீர்த்து வைப் பதற்கான ஒருங்கிணைந்த சேவை மையம் ரூ.48 லட்சத்தில் அமைக் கப்பட்டுள்ளது.

இம்மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. 24 மணி நேரமும் செயல்படவுள்ள இம் மையத்தை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் திறந்து வைத் தார். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள பெண்களுக் கான சேவை மையத்தில் குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் தொடர்பான பிரச்சினை கள், உடல் மற்றும் மனநலம் பாதிப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டல்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோர் பாது காப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச் சினைகளுக்கு இந்த மையத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு அதற்கான தீர்வும் காணப்படும்.

மேலும், பெண்களின் பாது காப்புக்காக அவசர சேவை, மருத் துவ உதவி, காவல் நிலையங்களில் புகார் கொடுக்க பெண்களுக்கு உதவி செய்தல், சட்ட ஆலோசனை மற்றும் சட்ட உதவி மையம், மனநல ஆலோசனைகள், தற்காலிக தங்கும்வசதி, காணொலி உள்ளிட்ட பல் வேறு வசதிகள் இந்த மையத்தில் செய்யப்பட்டுள்ளன.

பெண்களுக்கான சேவை மையத்தில் காவல் துறை அதி காரிகள், வழக்கறிஞர்கள், மனநல மருத்துவர்கள், தொழில்நுட்ப பணி யாளர்கள், பல்நோக்கு பணியாளர் கள் என 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூலம் முறையான ஆலோசனைகள் பெண்களுக்கு வழங்கி தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவசர வாகனம் மூலம் காவல் துறையினரால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு தேவை யான மருத்துவ உதவிகளை அளித்து, அருகே உள்ள அரசு அல்லது தனியார் இல்லங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உளவியல் ரீதியான ஆலோசனை மற்றும் ஆதரவு இந்த மையத்தில் பெறலாம். தேசிய, மாநில மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் இந்த மையத்தில் அளிக்கப்படும். அதேபோல், பெண் கள் புகார் அளிக்க 181 என்ற இலவச சேவை எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினைகளை தயங் காமல் தெரிவிக்கலாம்’’ என்றனர்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனையில் உள்ள பிணவறையைபுதுப்பிப்பது தொடர்பாகவும், ஆக்ஸிஜன் இருப்பு வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் கொள்கலனை ஆட்சியர் சண்முக சுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட திட்ட அலுவலர் கோமதி, வேலூர் மாவட்ட மகளிர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் காஞ்சனா, உதவி செயற்பொறியாளர் தேவன், உதவி பொறியாளர் ராஜாமணி, மருத்துவர் எழிலரசு, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் ஏ.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்