மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகள் சார்பில், குடியரசு தின நாளில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரிலும் விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி அறிவிக்கப்பட்டது. ஆனால், திருப்பூர் மாநர் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதால், தொழிற்சங்கத்தினர், விவசாயிகள் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
பொங்கலூர் ஒன்றியத்தை சேர்ந்த அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர், கட்சியினர் சார்பில் தடையை மீறி நேற்று டிராக்டர் பேரணி நடைபெற்றது.
அமராவதிபாளையத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பேரணியாக புறப்பட்டு திருப்பூர் நோக்கி வந்தனர். கோவில்வழி பம்ப் ஹவுஸ் அருகே, விவசாயிகளை அவிநாசிபாளையம் போலீஸார் தடுத்தி நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில், கோவில்வழி வரை சென்று பெருந்தொழுவு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை தொடர்ந்தனர்.
முன்னதாக, இந்த டிராக்டர் பேரணிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி இணை அமைப்பாளர் பி.ரத்தினசாமி தலைமை வகித்தார்.
பட விளக்கம்
திருப்பூர் - தாராபுரம் சாலையில் பேரணியாக சென்ற டிராக்டர்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago