இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தியாகிகள் தினமான ஜனவரி 29-ம் தேதி, காலை 11 மணிமுதல் 11.02 மணி வரை சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து தியாகிகள் தினத்தன்று காலை 11-05 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்கவுள்ளோம். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago