திருக்கோவிலூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச 2 டன் வெல்லம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், குடியரசு தினத்தை முன்னிட்டு தனிப்படைகள் அமைத்து மதுவிலக்கு சோதனை செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் ரேவதி தலைமையில் உதவி ஆய்வாளர் அசோகன் மற்றும் காவலர்கள், சங்கராபுரம் அடுத்த பவுஞ்சிப்பட்டு பகுதியில் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 50 சாக்கு மூட்டைகளில் 2 டன் எடையுள்ள வெல்லம் மற்றும் இரண்டு லாரி டியூப்களில் 120 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. வாகனத்தை ஓட்டி வந்த சேராப்பட்டு சந்தோஷ்(24) என்பவரை போலீஸார் கைது செய்தனர். வெல்லம், சாராயம் மற்றும் வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். வெல்லம் விற்ற திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சித்தேரிபட்டைச் சேர்ந்த சங்கர் மற்றும் குரும்பலுாரைச் சேர்ந்த ன் பர்வதம் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு தனிப்படைகள் அமைத்து மதுவிலக்கு சோதனை செய்ய உத்தரவிட்டிருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago