திண்டுக்கல்லில் விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சி களையும் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங் களின் சார்பில் நேற்று இரு சக்கர வாகன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் சட்டங்களை திருத்தக் கூடாது என்று கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் பேருந்துநிலையம் முன் தொடங்கிய இரு சக்கர வாகன ஊர்வலம் மணிக்கூண்டு பகுதியில் முடிவடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தினர் தேசியக் கொடியை கையில் ஏந்தி பங்கேற்றனர். சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் பிரபாகரன், எல்.பி.எப்., மாவட்டச் செயலாளர் அழகர்சாமி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்டத் தலைவர் ஜெயமணி, எச்.எம்.எஸ்., மாவட்டத் தலைவர் வில்லியம், ஐ.என்.டி.யு.சி., மாவட்டத் தலைவர் கண்ணன், டி.யு.சி.சி., மாவட்டச் செயலாளர் பசும்பொன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்வராஜ், செயலாளர் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago