தேனி மாவட்ட கல்வி நிலையங்களில் குடியரசு தின கொண்டாட்டம்

தேனி மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் 72-வது குடியரசுதின விழா கொண்டாடப் பட்டது. தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலாளர் கேஎஸ்.காசிபிரபு தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார் தேசியக் கொடியை ஏற்றினார்.

முதல்வர் சி.மதளைசுந்தரம் வரவேற்றார்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் கேபிஆர்.முருகன், பொதுச் செயலாளர் டி.ராஜ மோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

துணை முதல்வர் என்.மாதவன், கல்லூரி பெண்கள் உரிமை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆர்.சரண்யா, வேலைவாய்ப்பு அலுவலர் டி.அர்ச்சனா, உடற்கல்வி துறை தலைவர் கே.சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். உத்தமபாளையம் ஹாஜி கருத் தராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வர் ஹெச்.முகமதுமீரான் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்திய கப்பற்படையைச் சேர்ந்த முதுநிலை பயிற்றுவிப்பாளர் என்.மாரிச்சாமி கலந்து கொண்டு கப்பல் படையில் மாணவர்கள் சேர்வதற்கான வழிமுறைகள், தேர்வுகள் குறித்து விளக்கினார்.

கல்லூரியின் கப்பற்படை பிரிவு (பொறுப்பு) அதிகாரி எம்.ஆஷிக்குர்ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ்சையது அலிபாத்திமா நன்றி கூறினார்.

பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வர் சேசுராணி தலைமை வகிக்க, கல்லூரிச் செயலர் குயின்ஸ்லி முன்னிலை வகித்தார். காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வில்லியம்பாஸ்கரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எஸ்.சித்ரா வரவேற்றார். உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன் தலைமை வகிக்க, கல்லூரிச் செயலாளர் சி.காளிராஜ் தேசியக் கொடியை ஏற்றினார். விடுதிச் செயலாளர் கேகே.சேகர், இணைச் செயலாளர்கள் கே.சுப்புராஜ், வன்னியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE