தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கு, கல்லூரிச் செயலாளர் கேஎஸ். காசிபிரபு தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார் தேசியக்கொடி ஏற்றினார். முதல்வர் சி.மதளைசுந்தரம் வரவேற்றார்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் கேபிஆர். முருகன், பொதுச் செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் என்.மாதவன், கல்லூரி பெண்கள் உரிமை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆர்.சரண்யா, வேலைவாய்ப்பு அலுவலர் டி.அர்ச்சனா, உடற்கல்வித் துறை தலைவர் கே.சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வர் ஹெச்.முகமதுமீரான் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கடற்படை முதுநிலை பயிற்றுவிப்பாளர் என்.மாரிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.
கல்லூரி கப்பற்படை பிரிவின் பொறுப்பு அதிகாரி எம்.ஆஷிக்குர் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
என்எஸ்எஸ் அலுவலர் எஸ்.சையதுஅலிபாத்திமா நன்றி கூறினார்.
பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கணிதப் பேராசிரியர் கீதா அந்துவானேட் வரவேற்றார். முதல்வர் சேசுராணி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் குயின்ஸ்லி முன்னிலை வகித்தார். மாணவி நந்தினி ஈஸ்வரி தியாகிகளின் பங்கு குறித்து பேசினார்.
காந்திகிராமப் பல்கலை. பேராசிரியர் வில்லியம் பாஸ்கரன் தேசியக்கொடி ஏற்றினார்.
பேராசிரியர்கள் ரவிச்சந்திரன், வேளாங்கண்ணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எஸ்.சித்ரா வரவேற்றார். உறவின்முறைத் தலைவர் கேபிஆர். முருகன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் சி.காளிராஜ் தேசியக்கொடி ஏற்றினார்.
விடுதி செயலாளர் கேகே.சேகர், இணைச் செயலாளர்கள் கே.சுப்புராஜ், வன்னியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். செஞ்சிலுவைச் சங்க அலுவலர் ஆர்.லாவண்யா நன்றி கூறினார்.
கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், நிறுவனச் செயலர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். முதல்வர் ஜி.ரேணுகா வரவேற்றார்.
மாணவியர் கொடிப்பாடல் பாடினர். இணைச் செயலர் ஆர்.வசந்தன், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் தலைமை வகித்து கொடியேற்றினார். விரைவு நீதிமன்ற நீதிபதி ரூபனா, மாவட்ட உரிமையியல் நீதிபதி சித்ரா, அரசு வழக்கறிஞர் வெள்ளைச்சாமி, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சந்தானகிருஷ்ணன், செல்வம், நீதிமன்றப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago