தேனி மாவட்ட கல்வி நிலையங்களில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கு கல்லூரிச் செயலாளர் கேஎஸ்.காசிபிரபு தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார் தேசியக் கொடியை ஏற்றினார்.

முதல்வர் சி.மதளைசுந்தரம் வரவேற்றார்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் கேபிஆர்.முருகன், பொதுச் செயலாளர் டி.ராஜ மோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வர் ஹெச்.முகமதுமீரான் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்திய கப்பற்படையைச் சேர்ந்த முதுநிலை பயிற்றுவிப்பாளர் என்.மாரிச்சாமி கலந்து கொண்டார். கல்லூரியின் கப்பற்படை பிரிவு (பொறுப்பு) அதிகாரி எம்.ஆஷிக்குர்ரஹ்மான் உட்பட பலர் பங்கேற்றனர்.

என்.எஸ்.எஸ். அலுவலர் எ.ஸ்சையது அலிபாத்திமா நன்றி கூறினார்.

பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வர் சேசுராணி தலைமை வகித்தார்.

கல்லூரிச் செயலர் குயின்ஸ்லி முன்னிலை வகித் தார். காந்தி கிராமம் கிராமியப் பல்கலை. பேராசிரியர் வில்லியம் பாஸ்கரன் தேசியக்கொடி ஏற்றி னார்.

தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் நடைபெற்ற நிகழ்ச் சியில், முதல்வர் எஸ்.சித்ரா வரவேற்றார். உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் சி.காளிராஜ் தேசியக் கொடியை ஏற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்