நாடு முழுவதும் 72-வது குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறை, ஊர்க் காவல் படை, தேசிய மாணவர் படை, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறை சார்பில் 4 பேருக்கு தங்கப் பதக்க விருதுகளையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் 187 பேருக்கு பாராட்டுச் சான்றி தழ்களையும் வழங்கினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் 95 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சத்து 44 ஆயிரத்து 509 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். நிகழ்ச்சியில், நாகை எம்.பி செல்வராஜ், கீழ்வேளூர் எம்எல்ஏ மதிவாணன், காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவ லர் இந்துமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத் தில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆட்சியர் லலிதா தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் வே.சாந்தா தேசியக் கொடியேற்றி, பல்வேறு துறைகளின் சார்பில் 35 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 89 ஆயிரத்து 614 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதா னத்தில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ம.கோவிந்தராவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, வெண்புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு, காவல் துறையின் அணிவகுப்பு மரி யாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், பல்வேறு துறைகளின் சார்பில் 77 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 13 ஆயிரத்து 558 மதிப்பிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார். தொடர்ந்து சமூக சேவை, கரோனா பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற் றிய சமூக ஆர்வலர்கள், அரசு அதி காரிகள் உள்ளிட்ட 314 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கைத்தறி ஆடை அணிவித்து, கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி பி.மதுசூதனன், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலை வர் ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, கோட்டாட்சியர் வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காரைக்கால் கடற்கரை சாலையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆட்சியர் அர்ஜூன் சர்மா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினர், இந்திய ரிசர்வ் பட்டாலியன், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத் துறையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பி.ஜனார்த்த னன், கே.சக்திபிரியாள் ஆகியோ ருக்கு டாக்டர் அம்பேத்கர் நினைவுப் பரிசாக தலா ரூ.30 ஆயிரத்துக் கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து, கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக சேவையாற்றிய காரைக்கால் அகில இந்திய பண்பலை வானொலி, கரோனா தடுப்பு பணிகளுக்காக உதவி புரிந்த தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், தன்னார்வலர்கள், குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பிடம் பெற்ற அணியினர் உள்ளிட்டோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தியாகிகள் கவுரவிக் கப்பட்டனர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
விழாவில், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம், எம்எல்ஏ கே.ஏ.யு.அசனா மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago