வேலூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப் பட்டது.
வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் 72-வது குடியரசுதின விழா நேற்று நடை பெற்றது. விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத் தினார். பிறகு கரோனா காலத்தில் மக்களை பாதுகாக்கவும், நோய் பரவலை கட்டுப்படுத்த இரவு, பகல் பராமல் தன்னலமற்ற மருத்துவ சேவையாற்றிய வேலூர் சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் மற்றும் வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பி விநாயகம் உட்பட 75 பேருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுச்சான்றிதழ்களை விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், விஐடி துணை வேந்தர் ராம்பாபுகொடாளி, பதிவாளர் சத்தியநாராயணன், மாணவர் நல இயக்குநர் மகேந்திரகர்அமித்பாபுராவ், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் அடுத்த ஊசூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 72-வது குடியரசு தினத்தையொட்டி தலைமை ஆசிரியை தேவிகாராணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதேபோல், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி தலைமை ஆசிரியர் பொன்.வள்ளுவன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
காட்பாடி வட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில் குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். சங்க துணைத்தலைவர் பாரிவள்ளல் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். சங்கப் பொருளாளர் பழனி, செயலாளர் சிவவடிவு உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கரோனா தொற்று தடுப்புப்பணியில் சிறப்பாக பணியாற்றிய வேலூர் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கரோனா தொற்று தடுப்புப்பணியில் சிறப்பாக பணியாற்றிய இளஞ் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனனுக்கு, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திருப்பத்தூர் கிளைச்சிறையில் குடியரசு தினத்தையொட்டி கிளைச்சிறை வளாகத்தில் தேசிய கொடியை திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு, கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளுக்கு இனிப்புகள் வழங் கப்பட்டன. அதேபோல், திருப்பத் தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப்பணியில் சிறப்பாக பணியாற்றிய வாணியம்பாடி அரசு மருத்துவர் செந்தில்குமாருக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நற்சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago