வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இரு சக்கர வாகன பேரணி

By செய்திப்பிரிவு

பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புதுடெல்லியில் நேற்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக திருவண்ணாமலையிலும் டிராக்டர் பேரணி நடத்த திமுக கூட்டணி திட்டமிட்டிருந்தது. இதற்கு தடை விதித்த காவல் துறையினர், தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தினால், டிராக்டர் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தது.

இதையடுத்து, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் இரு சக்கர வாகன பேரணி நேற்று நடத்தினர். அண்ணா நுழைவு வாயிலில் இருந்து பேரணி புறப்பட்டது. அப்போது அவர்கள், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், புதுடெல்லியில் டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண் டித்து முழக்கமிட்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, காமராஜர் சிலையை சென்றடைந்தது. பேரணி முடிவில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்