திருப்பத்தூர் டவுன் கிளப்புக்கு ‘சீல்’ வைப்பு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் டவுன்கிளப்பில் அறுவறுக்கத் தக்க செயல்கள் நடை பெறுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த சார் ஆட்சியர் கிளப்புக்கு ‘சீல்' வைக்க நேற்று உத்தர விட்டார்.

திருப்பத்தூர் அரசு பூங்கா சாலையில் இயங்கி வரும் ‘டவுன் கிளப்’ ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த டவுன் கிளப் தலைவராக சார் ஆட்சியர் செயல்பட்டு வந்தார். இதில், அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என பலர் உறுப்பினர்களாக உள்ள னர். சமீபகாலமாக டவுன் கிளப்பில் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெறுவதா கவும், மது அருந்தும் இடமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், குடியரசு தினமான நேற்று டவுன் கிளப்புக்கு வந்த பலர் அங்கு வளாகத்தில் அமர்ந்து வழக்கம்போல சூதாட்டத்தில் ஈடுபட்டும், மது அருந்துவதாக திருப் பத்தூர் சார் ஆட்சியருக்கு புகார் வந்தது. உடனே, சார் ஆட்சியர் வந்தனாகர்க் அங்கு விரைந்து சென்றார்.

அப்போது, டவுன் கிளப் வளாகத்தில் மது அருந்திக் கொண்டும், புகைப்பிடித்தபடி சூதாடிக் கொண்டிருந்ததைக் கண்டு சார் ஆட்சியர் வந்தனாகர்க் அதிர்ச்சியடைந்தார்.

உடனே, தனது உதவி யாளர்களிடம் டவுன் கிளப் பில் உள்ள அனைவரையும் வெளியேற்றுமாறு சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் வட்டாட் சியர் மோகன் மற்றும் நகர காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர். பிறகு டவுன் கிளப்பில் இருந்து கட்டுக்கட்டாக சீட்டுக்கட்டுகள், மது பாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள், தின் பண்டங்கள், சூதாட்டத் துக்காக பயன்படுத்தி வந்த புத்தகம் உள்ளிட் டவைகளை காவல் துறை யினர் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, அறுவறுக்கத்தக்க செயல்கள் டவுன் கிளப்பில் நடைபெற்று வந்ததால் கிளப்புக்கு ‘சீல்' வைக்க சார் ஆட்சியர் வந்தனாகர்க், வருவாய்த் துறையினருக்கு உத்தர விட்டார். அதன்பேரில், வருவாய்த் துறையினர் கிளப்புக்கு ‘சீல்' வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்