இதில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜராஜேஸ்வரி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் அனுராதா, உதவி திட்ட அலுவலர்களான வசந்தி, ராஜேஷ்குமார் பங்கேற்றனர்.
விழாவில், அரசு மாணவியர் விடுதிகளில் தங்கி படித்து 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் இடம் பெற்ற மாணவிகளுக்கு ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ், கடந்த ஆண்டுகளில் திறன் வளர்ப்பு பயிற்சி முடித்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள, 349 மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். இதையடுத்து, `பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு கூட்டமும் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago