காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் தேசிய வாக்காளர் தினத்தில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

காஞ்சிபுரத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய 5 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு கேடயமும், தேர்தல் ஆணைய லட்சினை அச்சிட்ட உடையும் வழங்கப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்களுக்கு புதியவாக்காளர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தர், வருவாய் கோட்டாட்சியர் வித்யா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன் பங்கேற்றனர்.

செங்கை மாவட்டத்தில் ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் கோட்டாட்சியர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம், பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தாம்பரம் பேருந்து நிலையத்தில் தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வுதுண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

திருவள்ளூரில் ஆட்சியர் பொன்னையா தலைமையில் தேதிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆட்சியர் வளாக மைதானத்தில் மாரத்தான் போட்டியும் நடைபெற்றது. பின்னர்ஆட்சியர் தலைமையில் வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு விளக்க ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டவருவாய் அலுவலர் முத்துசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் புனிதா, பாலகுரு, வருவாய் கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி, மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் அருணா உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்