கடலூரில் போலீஸார் தாக்கியதாக கூறி திருநங்கைகள் மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் வேதநாதசுவாமி கோயிலில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களை திருநங்கைகள் பலரும் ஆசீர்வாதம் செய்து காசுவாங்குவதில் ஈடுபட்டனர். கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், பொதுமக்களுக்கு இடையூறு செய்த திருநங்கைளை விரட்டினர். இதில் திருநங்கைகள் இருவரை போலீஸார் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் கடலூர் அலுவலகத்தில் மனுக்கொடுக்க சென்றனர். ஆட்சியர் அலுவலக வாயிலில் பணியில் இருந்த போலீஸார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் திருநங்கைகள் ஆட்சியர் அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் போலீஸார் திருநங்கைகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago