நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றக் கோரி கிருஷ்ணகிரியில் கொமதேக ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றக் கோரி, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் வஜ்ஜிரவேல் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அண்ணாதுரை, நகர செயலாளர் ராமமூர்த்தி, நகர வர்த்தக அணி செயலாளர் சிவபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகள் தொடர்பாக மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விளக்கி பேசினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

‘தென்பெண்ணை ஆறு, வாணி ஒட்டு, தும்பலஅள்ளி அணை இணைப்பு வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். கிருஷ்ணகிரி-திண்டிவனம் 4 வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன், செய்தியாளர்களிடம் கூறும்போது, “தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பாசன கால்வாய் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்