வாணி ஒட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரியில் திமுக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் நடந்தது. மாநில மகளிர் அணி தலைவர் மருத்துவர் காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன், துணைச் செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணி ஒட்டு என்ற இடத்தில் தடுப்பணை கட்டி பெரிய ஏரி மூலம் படேதலாவ் கால்வாய்க்கும், வலதுபுற கால்வாய் வெட்டும் திட்டம், அலியாளம் அணைக்கட்டிலிருந்து கால்வாய் மூலம் தருமபுரி மாவட்டம் தூள்செட்டி ஏரிக்கும் தண்ணீர் விடும் திட்டங்களை உடனடியாக மக்கள் விரும்பும் வழியில் நிறைவேற்ற வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் எம்எல்ஏ செங்குட்டுவன், செய்தியாளர்களிடம் கூறும்போது, திமுக ஆட்சியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இன்னும் 40 சதவீதம் கிராமங்களுக்கு ஒகேனக்கல் தண்ணீர் கொண்டு போய் சேர்க்கவில்லை. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எம்பி கே.பி.முனுசாமி, மு.க.ஸ்டாலின் தொடர்பாக அநாகரிக வார்த்தைகளால் பேசியது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு சற்றும் பொருந்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago