திருவாரூரில் திட்டமிட்டபடி இன்று (ஜன.26) டிராக்டர் பேரணி நடைபெறும் என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக் குழுவின் சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதர வாக குடியரசு தினத்தன்று (ஜன.26) தேசியக் கொடியேந்தி திருவாரூரில் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டிராக்டர் பேரணி நடத்த மாவட்ட காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்நிலையில், திருவாரூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அவசரக் கூட்டம் ஒருங்கி ணைப்பாளர் மாசிலாமணி தலையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர், செய்தி யாளர்களிடம் மாசிலாமணி கூறி யது: திருவாரூரில் நாளை (இன்று) நடைபெறும் டிராக்டர் பேரணிக்கு மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளதுடன், தடையை மீறி போராட்டம் நடத்தினால் விவசாயிகளின் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுநர் கைது செய்யப்படுவார். விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டும் வகையில் அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.
திருவாரூரில் நாளை(இன்று) குடியரசு தினம் கொண்டாடப்பட்ட பிறகு, திட்டமிட்டபடி டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும்.
பேரணியில் பங்கேற்க வரும் விவசாயிகளையும் அவர்களது டிராக்டர்களையும் தடுத் தால், அதனால் ஏற்படும் விளைவு களுக்கு காவல் துறையும் அதிமுக தலைமையிலான தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குடியரசு தினமான இன்று (ஜன.26) விவசாயிகள் டிராக் டர் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், அதையும் மீறி நடத்தினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (பெரம்பலூர்) நிஷா பார்த்திபன், (அரியலூர்) ஆர்.னிவாசன் ஆகியோர் எச்சரித்துள்ளனர். ஆனால், திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago