நெல்லை சுகாதாரத்துறையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி சுகாதாரத்துறை யில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சுகாதாரத்துறை இணை இயக்குநரின் ஓட்டுநர் சங்கரை கைது செய்தனர்.

சுகாதாரத்துறையின்கீழ் மாத வாடகைக்கு 4 சக்கர வாகன ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கு வாகனம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக வேலாயுதம் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்திருந்தார். இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஓட்டுநர் சங்கரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து சங்கரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை முக்கிய அதிகாரிகளிடம் மேற்கொண்டு விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்