வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேசிய வாக் காளர் தினத்தையொட்டி இளம் வாக்காளர்களுக்கு வண்ண வாக் காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர்கள் வழங்கினர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு செவிலியர் கல்லூரி மாணவி, மாநில அளவிலான ஓவியப் போட்டியில் முதலிடம் பிடித்து பரிசு பெற்றுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாக்காளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை யில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள், 3 தேர்தல் மேற்பார்வை அலுவலர்கள், 8 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுக் கோப்பையுடன் கேடயங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும், இளம் வாக்காளர் களுக்கான அடையாள அட்டையை ஆட்சியர் சண்முக சுந்தரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், வருவாய் கோட் டாட்சியர்கள் கணேஷ் (வேலூர்), ஷேக் மன்சூர் (குடியாத்தம்), தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இ-எபிக் புதிய சேவை
தேர்தல் ஆணையம் e-EPIC (இ-எபிக்) என்ற புதிய சேவையை தொடங்கியுள்ளது. அதன்படி, ஓர் வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையை அவரது கைபேசியிலோ அல்லது கணினியிலோ பதிவிறக் கம் செய்து கொள்ளலாம். இ-எபிக் சேவையை https://nvsp.in/ மற்றும் https://voterportel.eci.gov.in/ ஆகிய இணையதளங்கள் அல்லது voter helpline என்ற செல்போன் செயலியை பயன்படுத்தலாம்.இந்த சேவையை வரும் 31-ம் தேதி வரை புதிதாக பதிவு செய்துள்ள இளம் வாக்காளர்கள் பயனடையலாம். வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்து வாக்காளர்களும் பயனடையலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11-வது தேசிய வாக்காளர் தினம் பூட்டுத்தாக்கு அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களுக்கு புதிய வண்ண அடையாள அட்டையை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வழங்கினார்.தொடர்ந்து, தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தமுறை பணியில் சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி அலு வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ராணிப் பேட்டை சார் ஆட்சியர் இளம் பகவத், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago