தமிழக அரசு அறிவித்தபடி செல்போன் வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் உள்ளிருப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

செல்போன் வழங்கக் கோரி வேலூர் அண்ணாசாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலு வலகத்தில் நேற்றிரவு மாற்றுத் திறனாளிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி களுக்கு செல்போன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்க குறைந்த எண்ணிக்கை செல்போன்கள் மட்டும் வேலூர் மாவட்டத்துக்கு வந்திருப்பதாதக் கூறப்படுகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் செல்போன் வழங்க வேண்டும் எனக் கோரி மாற்றுத்திறனாளிகள் சில நாட் களுக்கு முன்பு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது, ஜனவரி 25-ம் தேதி (நேற்று) அனைவருக்கும் செல்போன் வழங்கப் படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், அதிகாரிகள் தெரிவித் தபடி நேற்று செல்போன் வழங்கப்படவில்லை. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செல்போன் பெறுவதற்காக வந்திருந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந் தனர். அவர்களிடம், அதிகாரிகள் முறையான பதில் தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

இதையடுத்து, அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து அண்ணா சாலையில் கொளுத்தும் வெயிலில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்தனர். மறியலை கைவிட மறுத்தவர்கள் போராட்டத்தை தொடர்ந் தனர். பின்னர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் மாற்றுத்திறனாளிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

எனினும் செல்போன் வழங்கும்வரை கலைந்து செல்ல மாட்டோம் என மாற்றுத்திறனாளிகளில் ஒரு சிலர் நேற்று இரவு 9.30 மணிவரை மாற்றுத்திறனாளி கள் நல அலுவ லகத்திலேயே காத் திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்