குடியரசு தினத்தை முன்னிட்டு உதகையில் உள்ள அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நாளை (ஜன.26) நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியேற்றுகிறார். மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீலகிரி மாவட்டஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஜனவரி 26-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சிக்குப் பின்னர் காவலர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு அரசுநலத் திட்ட உதவிகள், சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வழக்கமாக குடியரசு தினத்தன்று நடத்தப்படும் மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியோடு பங்கேற்க அதிகாரிகள் மற்றும் மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத முழு மாவட்டமாக மாற்றவும், சுற்றுச்சூழலையும், இயற்கை அழகையும் பேணிக் காக்கவும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago