கடலூரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆலோசனை கூட்டம்

By செய்திப்பிரிவு

கடலூரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் கடலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். ஒற்றுமை மேடை கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன் வரவேற்று பேசினார். திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இளபுகழேந்தி, நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சிவக்குமார், மதிமுக நகர செயலாளர் ஐயப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நகர செயலாளர் செந்தில், மாநில துணை செயலாளர் ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் அமர்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகம் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்