அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 690 ஊழியர்களுக்கு ரூ.96.19 கோடிக்கு ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்கப்பட்டன.
கடந்த 2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பணப்பயன்களை அளித்திடும் வகையில் முதல்வர் பழனிசாமி ரூ.972.43 கோடி ஒதுக்கி ஆணை யிட்டார்.
அதன்படி விழுப்புரம் கோட்டத் தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 690 போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.96.19 கோடிக்கு ஓய்வூதிய பணப்பயன்களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து வளவனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரகுப்பம் பகுதியில் வீடற்ற 15 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை, கூடு தல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், திட்ட இயக்குநர் மகேந்திரன், எம்எல்ஏக்கள் குமரகுரு, பிரபு, முத்தமிழ்செல்வன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் முத்துக்கிருஷ்ணன், பொதுமேலாளர் செல்வம் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago