தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழுவில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

மனிதநேய மக்கள் கட்சியின் தென் மண்டல பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகித்தார்.

கூட்டத்தில், ‘மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றை உடனடியாக கைவிட வேண்டும்.

நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும், மத அடிப்படையில் முன் விடுதலை மறுக்கப்படும் முஸ்லிம் சிறைவாசிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்.

தேர்தலில் திமுக, கூட்டணி கட்சிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளும் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும். சமையல் எண்ணெய் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் சபியுல்லாகான், மாநில செயலாளர்கள் மைதீன் சேட்கான், பாதுஷா, முஸ்தபா, மாவட்டத் தலைவர்கள் ரசூல்மைதீன், ஆசாத், யாகூப், ஜிஸ்தி, சேக் அப்துல்லா, இப்ராகிம், தலைமை செயற்குழு உறுப்பினர் மில்லத் இஸ்மாயில், மாவட்டப் பிரதிநிதி ஏர்வாடி ரிஸ்வான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்