சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது சாலை பணியாளர் சங்கம் தீர்மானம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 7-வது கோட்ட மாநாடு திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது.

கோட்டத் தலைவர் மகாதேவன் தலைமை வகித்தார். உட்கோட்ட தலைவர் ஏழுமலை வரவேற்றார். மாநில செயலாளர் மகேந்திரன் தொடக்க உரையாற்றினார். ஆண்டு அறிக்கையை கோட்டச் செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் வரவு-செலவு அறிக்கையை கோட்டப் பொருளாளர் ராஜேந்திரன் வாசித்தனர். மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் சிறப்புரையாற்றினார். பின்னர், மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில், “சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக மாற்றி ஆணை பிறப்பிக்க வேண்டும், பணி நீக்கத்தால் உயிரிழந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு 10 சதவீத விபத்து படி வழங்க வேண்டும், சாலை பராமரிப்புப் பணியை தனியார் வசம் வழங்குவதை கைவிட்டுவிட்டு தமிழக அரசே மேற்கொள்ள வேண்டும், சீரமைப்பு என்ற பெயரில் நெடுஞ்சாலைத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும், மதுரையில் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ள 7-வது மாநில மாநாட்டில் பெரும் திரளாக கலந்து கொள்வது“ உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில், மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்