புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை பெற புதிய வழிமுறைகள் அறிமுகம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

By செய்திப்பிரிவு

புகைப்பட்டதுடன் கூடிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் வசதிக் காக மின்னணு புகைப்பட அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் வசதியை வாக்காளர்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளது. புதிய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பி.வி.சி.அட்டையுடன் கூடுதலாக மின்னணு முறையும் அறிமுகப் படுத்தப்படுகிறது. எனவே, ஒவ்வொரு வாக்காளரும் தங்களுடைய கைப்பேசி எண் கொண்ட 1. htts://nvsp.in/ 2. Voter Helpline Mobile App மற்றும் htts://voter portel.eci.gov.in/ என்ற வழிமுறைகள் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

மின்னணு வாக்காளர் அடையாள அட்டையானது திருத்த முடியாத வண்ணம் முறையில் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யும் வகையிலும், கணினியில் பிரிண்ட் செய்யும் வகையில் சேமித்து வைக்கலாம், பிரிண்ட் எடுத்து லேமினேட் செய்து கொள்ளலாம்.

நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறையில் புதிதாக சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களுக்கு அவர்களது கைப்பேசி எண்ணில் மின்னணு வாக் காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு அனுப்பி வைக்கப்படும்.

அதைக்கொண்டு ஏதேனும் ஒரு வழிமுறையில் புதிய வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல, ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஏனைய வாக்காளர் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தங்களது கைப்பேசி எண்ணை கொண்டு இணைய வழிமுறைகள் மூலம் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று, கைப்பேசி எண்ணை பதிவு செய்யாமல் இருந்தால் இணைய வழி முறைகளில் உள்ளீடு செய்து கைப்பேசி எண்ணை பதிவு செய்து மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்