மெய் நிகர் கண்காட்சி தொடக்கம்

நவீன தொழில்நுட்பட உதவியுடன் மெய்நிகர் கண்காட்சிக்கான தளத்தை, ஆயத்த ஆடை ஏற்றுமதிக் மேம்பாட்டுக் கவுன்சில் (ஏ.இ.பி.சி.)உருவாக்கியுள்ளது.

இந்த தளத்தில், ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தங்கள்தயாரிப்புகளை காட்சிப்படுத்தலாம். வெளிநாட்டு வர்த்தகர்கள், தங்களது இருப்பிடத்திலேயே ஆன்லைனில் கண்காட்சி அரங்குகளை பார்வையிடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆடை உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் வர்த்தக விசாரணை, கருத்தரங்குகள் நடத்தும் வசதிகளும் உள்ளன. இந்த மெய்நிகர் கண்காட்சி தளத்தை, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய ஜவுளித் துறை மந்திரி ஸ்மிருதி இரானி ஆகியோர் பங்கேற்று, தொடங்கி வைத்தனர்.

ஏ.இ.பி.சி. தலைவர் சக்திவேல் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்