விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் விழுப்புரத்தில் அரசு பேருந்து ஜப்தி

By செய்திப்பிரிவு

வானூர் அருகே ஆதனப்பட்டு கிரா மத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் கார்த்திகேயன் (35). இவர் விழுப்புரம் காமராஜர் வீதியில் நகை தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொழில் விஷயமாக தனது பைக்கில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து மீண் டும் விழுப்புரத்திற்கு பைக்கில் வந்தார். மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனை அருகில் வரும் போது பின்னால் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்தஅரசு பேருந்து, மோதியதில் கார்த்தி கேயனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து வில்லியனூர் போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.

இந்த விபத்து தொடர்பாக நஷ்ட ஈடு கேட்டு கார்த்திகேயன், விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட கார்த்திகே யனுக்கு நஷ்ட ஈடாக ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை அரசு போக்குவரத்துக்கழகம் வழங்க வேண்டும் என்று 2.4.2019 அன்று உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈட்டு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. மனுதாரர் கார்த்திகேயன் இதுதொடர்பாக முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமராஜ், பாதிக் கப்பட்ட கார்த்திகேயனுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் வட்டியுடன் சேர்த்து ரூ.3 லட்சத்து 38 ஆயிரத்து 813-ஐ வழங்க வேண்டும் என்றும் இந்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்க வில்லையெனில் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஜப்தி செய்யப்படும் என்று கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டார். இருப்பினும் அரசு போக்குவரத்துக்கழகம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நஷ்ட ஈட்டு தொகையை வழங்கவில்லை.

இதையடுத்து நேற்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட இருந்த அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

ஜப்தி செய்யப்பட்ட சில மணி நேரத்தில் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம், நஷ்ட ஈடு தொகைக்கான காசோலையை நீதிமன்றத்தில் வழங்கியது. அதன் பிறகு அந்தப் பேருந்து விடுவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்