விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி வெள்ளியக்குடி கிராமத்தில் இயற்கை முறையில் நஞ்சில்லா காய்கறி சாகுபடி செய்யும் குழு அமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானி அரிசுதன் விவசாயிகளிடம் நஞ்சில்லா காய்கறி குறித்து உரையாற்றினார். உதவிப் பேராசிரியர் (பூச்சியியல் ) விஜயராகவன் பேசுகையில், பயிர்களில் ஏற்படும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது பற்றி எடுத்துரைத்தார். கீரப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் முன்னிலை வகித்தார்.
நஞ்சில்லா காய்கறி சாகுபடி குழுவின் தலைவராக சற்குணவதி திராவிடமணி, செயலாளராக ஜெயராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago