அளேசீபம் கிராமத்தில் எருதுவிடும் விழாவில் சீறிப் பாய்ந்த காளைகள்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கிராமம் அளேசீபம். இக்கிராமத்தில் பொங்கல் விழாவினை தொடர்ந்து நேற்று எருதுவிடும் திருவிழா நடந்தது.

இவ்விழாவில் பேரிகை, சூளகிரி, ஓசூர், பீர்ஜேப்பள்ளி, சானமாவு உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்தும், கர்நாடகா மாநில எல்லையோர கிராமங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் வாகனங்களில் அழைத்து வந்தனர். காளைகள் அலங்கரிக்கப்பட்டு, அதன் கொம்புகளில் விதவிதமான தட்டிகளை கட்டினர். இதனை தொடர்ந்து காளைகளுக்கு கோ-பூஜை நடந்தது.

பின்னர், விழா திடலில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிட்டனர். சீறிப் பாய்ந்து ஓடிய காளைகளின் கொம்பில் கட்டப்பட்டிருந்த தட்டியை பறிக்க இளைஞர்கள் முயன்றனர். இளைஞர்களிடம் சிக்காமல் காளைகள் ஓடின. காளைகள் கூட்டத்தில் புகுந்ததால் 30-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவ்விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

இதுகுறித்து சூளகிரி பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் எருதுவிடும் விழாவில் காளைகளின் கொம்புகளுக்கு இடையில் கட்டப்படும் தட்டிகள் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை இருக்கும். மேலும், தட்டியில் தங்க மோதிரம், ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை காளையின் உரிமையாளர்கள் கட்டி விடுவார்கள். இவற்றை இளை ஞர்கள் பறிக்க முயற்சி செய்வார்கள்.

தங்களது காளைகளின் கொம்பு களில் இருந்து தட்டியைப் பறிப்பவர்களுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்குவதாக உரிமையாளர்கள் மைக் மூலம் அறிவிப்பும் வெளியிடுவார்கள். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டைய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்