புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தஞ்சாவூர் ரயிலடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் தொடங்கிவைத்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் ஜெயபால் முடித்து வைத்துப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, தொழிலாளர் களுக்கு எதிராக மாற்றியுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப் பப்பட்டன. இதில், பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல, நாகை அவுரித் திடலில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் தங்கமணி, அரசு போக்குவரத்துக் கழக மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க மாவட்டத் தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தொமுச மாவட்டத் தலைவர் ரத்தினம் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன் தொடங்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.தர் முடித்து வைத்தார்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நேற்று நடைபெற்ற தர்ணாவுக்கு, தொழிற்சங்க நிர்வாகிகள் எஸ்.அகஸ்டின், ரங்கசாமி, குமார், சின்னசாமி, ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago