திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் ஐயப்பன் தலைமையில் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி ஜன.29-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ள அறப் போராட் டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பங்கேற்கச் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மேலும், பயிர்க் காப்பீடு செய்துள்ள அனைத்து விவ சாயிகளுக்கும் முழு காப்பீடு இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும். நிவர் மற்றும் புரெவி புயல் தாக்கத்தால் வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி வீடுகள் கட்டித்தர அரசு முன் வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பாமக மாநில துணை பொதுச் செயலாளர் வேணு.பாஸ்கரன், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், உழவர் பேரியக்க மாநில துணைத் தலைவர் பிரபாகரன் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago